follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2கெஹெலியவுக்கு எதிரான வழக்கு - சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு – சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

Published on

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழிகாட்டுதலின் கீழ் முறைப்பாட்டில் மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றம் மேலதிக சாட்சியங்களுக்காக ஜூன் 13 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியிலிருந்து தனது சொந்த கையடக்க தொலைபேசி கட்டணமான 240,000 ரூபாவை செலுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...