எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிவதற்காக 40 உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை 25 தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதில் 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சை குழுக்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுஜன ஐக்கிய முன்னனி நேற்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
அதற்கமைய, குறித்த மாவட்டத்தில் 5 நகரசபைகளுக்கும் 3 பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் மாவட்டத்துக்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது.