follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்'ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி' - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

‘ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி’ – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் கடந்த மார்ச் 11 கடத்தப்பட்டது.

400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
24 மணி நேரத்திற்கு பின் பாகிஸ்தான் இராணுவம் எடுத்த நடவடிக்கையில் ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இந்த ரயில் கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலைப் படைக்கு பின்னால் இந்தியா உள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதன் அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பது முழு உலகிற்கும் தெரியும். பாகிஸ்தான் அதன் சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உள்நோக்கிப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...