மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய நிஷாந்த அனுருத்த வீரசிங்க அந்தப் பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.