சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக உயிர்மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்