ஹோமாகம, பிடிபனவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் இன்று (7) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் ராஜிந்திர ஜெயசூரிய மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த ஒவ்வொருவரும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.