இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரது டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதால் அதன்பின் அணித்தலைவர் பதவி குறித்து பேசப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.