follow the truth

follow the truth

May, 8, 2025
HomeTOP1ஜனாதிபதி - உலக வங்கி தலைவர் இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி – உலக வங்கி தலைவர் இடையே கலந்துரையாடல்

Published on

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள உலக வங்கி குழுமம் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலாக் கைத்தொழில், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை, உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக் கூடிய துறைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அந்த நோக்கத்திற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

உலக வங்கி குழுமத்தின் விசேட ஆலோசகர் ட்ரெவர் கின்கெய்ட்(Trevor Kincaid), இலங்கை, நேபாளம் மற்றும் மாலை தீவுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன்(David Sislen), சர்வதேச நிதி நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் இமாத் ஃபகூரி(Imad Fakhoury),மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி கிவோர்க் சார்கஸ்ஜான் (Gevorg Sargsyan) ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றானர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மின்கட்டணத் திருத்தம்

இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08)பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மறைந்த கோசல...