அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி கருவாத்தோட்டம், ப்ளவர் வீதி பகுதியில் காரொன்றுக்குள் குறித்த சந்தேக நபர் சட்டவிரோதமாக நுழைந்து 8 வயது சிறுமியை உள்ளே தள்ளி மிரட்டிய சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, கருவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர் கொலன்னாவ பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.