மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடனும், மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஒத்துழைப்புடனும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, மியான்மரின் மியாவாடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில், கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 15 இலங்கையர்களை மீட்பதில் வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் போது, ஆட்கடத்தல் சதித்திட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்குமாறும், இலங்கையர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.