ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இந்த இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனை விரைவாக மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு வரிவாக ஆராயப்பட்டன.
மேலும், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கு பொருந்தக்கூடிய வகையிலான சில மாற்றங்களையும் மேற்கொண்டு இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.