follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP2சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய, கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரலே, கேகாலை மாவட்டத்தில் புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் வரகாபொல, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று(18) காலை 10.00 மணி முதல் நாளை (19) காலை 10.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...

மின்கட்டண திருத்த யோசனை தொடர்பான மக்கள் கருத்து கோரல்

மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண்...