நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை (22) முன்னெடுக்கவிருந்த நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தனர்.
சுகாதார அமைச்சின் பதில் சுகாதார செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தைத் தற்காலிகமாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நிறுத்தியுள்ளது.
அதன்படி, நாளை (22) சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.