follow the truth

follow the truth

May, 22, 2025
HomeTOP2உப்பு கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்படக்கூடும்

உப்பு கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்படக்கூடும்

Published on

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று(21) நாட்டிற்கு வரவிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக உப்பு தொகை சில நாட்களுக்கு தாமதமாகலாம் என்றும், அதன் பிறகு நாட்டிற்கு உப்பு தொடர்ந்து கொண்டுவரப்படும் என்றும் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பு என மொத்தம் 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து வரி அறவிடுவது தொடர்பான வழக்கு – மே 28 விசாரணைக்கு

தேசிய தரத்திலான கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வகைப்படுத்தி வரி அறவிட எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி...

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி...

ஹஜ், உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி – இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம்

விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு...