follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP2இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

Published on

இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காணி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைத்தல் மற்றும் அந்த காணியுடன் தொடர்புடைய செயற்பாடுகளை பிரச்சினைகளின்றி முன்னெடுப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இலஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...