இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
4 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கையூட்டல் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் மோட்டார் வாகன திணைக்களத்தில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.