follow the truth

follow the truth

June, 1, 2025
HomeTOP2இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

Published on

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...