follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

Published on

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும் அதனை மறுசீரமைக்கும் திட்டம் 2026 ஆம் ஆண்டு சிங்கள இந்து புது வருடத்திற்கு இலங்கை பஸ் போக்குவரத்து சபையினால் மக்களுக்கு விசேட பரிசாக புதிய மத்திய பஸ்தரிப்பிடமாக ஊருக்கு போய் வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் மேற்கொண்ட கண்காணிப்பு விஷயத்துக்கு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

நேற்று (16) இடம்பெற்ற இக்கண்கானிப்பு பயணத்தின் போது சம்பந்தப்பட்ட பஸ் தரிப்பு நிலைய மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் மேல் மாகாண சபையினால் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை விட சிறந்த திட்டமொன்றை தயாரித்து, ஒரு வருட காலத்தினுள் இந்த மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டு அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த இடத்தில் நிலைமை மிகவும் மோசமானது. பொதுமக்களுக்கு எவ்வித வசதிகளும் இல்லை. பஸ் வண்டிகள் மாத்திரம் தான் உள்ளன. ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் இலங்கையின் பிரதான 50 ஸ்தரிப்பு நிலையங்களை மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...