ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.