follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2இலங்கை - இந்தோனேசிய இடையே ஒருங்கிணைந்த முதலீடுகள் தொடர்பாக அவதானம்

இலங்கை – இந்தோனேசிய இடையே ஒருங்கிணைந்த முதலீடுகள் தொடர்பாக அவதானம்

Published on

இலங்கையின் க்ராஃபைட், பொஸ்பேட் மற்றும் கனிமங்கள் கைத்தொழில் துறைக்காக இந்தோனேசியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த முதலீடுகளை (G2G) மேற்கொள்ளுதல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் இந்தோனேசிய தூதுவர் தேவி கஷ்டினா தோபின் (Dewi Gustina Tobing), கைத்தொழில் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் நேற்று (19) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியை சந்தித்த போது இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தோனேசியாவில் மேற்கொள்ளப்படும் மீளமின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலங்கள் (Re-Charge Battery) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் க்ரபைட்டைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக இந்தோனேசிய தூதுவர் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பைக் கோரியதுடன், இரு அரசாங்கங்களுக்கும் இடையே ஒருங்கிணைந்த முதலீட்டு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தி அதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இணக்கம் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் இலத்திரனியல் மின்கல உற்பத்தியாளர்களின் சர்வதேச கண்காட்சிக்காக இலங்கையின் க்ரபைட் உற்பத்தி துறைக்கு அழைப்பு விடுத்த தூதுவர் தேவி கஷ்டினா தோபின் (Dewi Gustina Tobing) மிகவும் விரைவாக இலங்கை – இந்தோனேசிய அரசாங்கங்களுக்கிடையே க்ரபைட் உற்பத்திக்காக ஒருங்கிணைந்த முதலீட்டை மேற்கொள்வதற்குக் காணப்படும் இயலுமை தொடர்பாக நம்பிக்கை தெரிவித்தார்.

அவ்வாறே இரு நாடுகளுக்கும் வாய்ப்பாக அமையும் வகையில் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள், கனியமணல், பொஸ்பேட், பழுப்பு நிற சீனி, பதிக், ஆடை, அலுமினியம், இரும்பு மற்றும் சேவைத் துறை உட்பட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்கு எதிர்பார்ப்பதன் முக்கியம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா மற்றும் விவசாய தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதற்குக் காணப்படும் வாய்ப்புத் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...