follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP2அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு ஜூலை 23 விசாரணைக்கு

அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு ஜூலை 23 விசாரணைக்கு

Published on

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை 23 ஆம் திகதி அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நொச்சியாகமவில் உள்ள பி.டி.ஜி. அக்ரி பிஸ்னஸ் நிறுவனத்திடமிருந்து பெருமளவு சோளத்தினை பெற்று, அதற்குரிய தொகையை செலுத்தாமல், 05 கோடியே 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்து நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டின் கீழ், மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு அழைக்கப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய, ஜூலை 23 ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வழக்கு ஜூலை 23 ஆம் திகதி அழைக்கப்படவுள்ள நிலையில், சந்தேக நபர் அர்ஜுன் அலோசியஸ் மீண்டும் அனுராதபுர முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்...

22 நாட்களில் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூன் மாதத்தின் முதல் 22 நாட்களில், 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை 2025 நவம்பர் 10 ஆம் திகதி...