follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP26 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

Published on

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பணிகள் மற்றும் நோக்கில் மதுபானம் மற்றும் புகையிலைத் துறையை முறையாக ஒழுங்குபடுத்தி வரிப் பணத்தை அரசாங்கத்திற்கு அளவிடுவதற்கும், அத்தொழிலில் சட்ட விரோதமான பணப் பாய்ச்சல் தொடர்பான சட்டத்தை பலப்படுத்துதல், அதனால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகளைத் தடுப்பதன் ஊடாக மக்களுக்குத் தெளிவு படுத்தி, சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதற்காக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி 2022 ஆம் ஆண்டில் 170.3 பில்லியன், 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாய்களும், 2024 ஆம் ஆண்டில் 226.7 பில்லியன் ரூபாய்களும் அரசாங்கத்திற்கு அறவிடுவதற்கு மதுவரித் திணைக்களம் செயற்பட்டுள்ளது. மேலும் 2025 ஜூன் 30 வரை 120.5 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன் அது நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இலக்கில் 102.6 % வீத வளர்ச்சியாகும்.

ஒவ்வொரு அரசாங்கமும் மதுபானம் மற்றும் புகையிலை அடிப்படையில் வரி விதிப்பு இடம்பெற்றுள்ளமை, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரமன்றி அதன் உற்பத்திகளை நுகர்வதை கட்டுப்படத்துதல் மற்றும் அவ்வுற்பத்திகளுக்குக் காணப்படும் கேள்வியை குறைப்பதனால் சமூக மற்றும் சௌபாக்கிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின்,...