ஹுன்னஸ்கிரிய – மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் பழுதுபார்க்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.
இதனால், மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை மாவட்ட செயலாளர் கேட்டுக்கொள்கிறார்.
இது 3 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.”