350 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையில் செல்ல அனுமதித்த பிரதான நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.