விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் நுளம்புகள் பெருகக்கூடிய 35,495 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் உள்ள 111 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய 1100 குழுக்களின் பங்கேற்புடன் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை செயல்படுத்தியது.
இதற்கு இணையாக, நாடு முழுவதும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், 144,250 வளாகங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றுள் 35,495 வளாகங்கள் நுளம்பு பரவக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4275 வளாகங்களில் நுளம்பு குடம்பிகள் பரவியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளன.
அத்துடன், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிரதேசங்களில் 3812 வளாகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன், 982 வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கு, பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பணியிடங்கள் மற்றும் மத இடங்கள், மிகவும் அவதானம் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.