கடந்த சில வாரங்களாக கொழும்பு கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வரும் கடுகதி ரயில் சேவையை, கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து தொடங்கவும், காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்பட்டு வரும் கடுகதி ரயில் சேவையை, கல்கிஸ்ஸை வரை நீட்டிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில நாட்களாக கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து இந்த கடுகதி ரயில் சேவையை தொடங்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாளை (10) முதல், கடுகதி ரயில் சேவை, கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிப்பதற்கும், கடுகதி ரயில் சேவையை கல்கிஸ்ஸை ரயில் நிலையம் வரை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.