மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், உண்மையில் வணிகத் திட்டம் இல்லாமல் கட்டப்பட்ட விமான நிலையமாகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது கைவிடப்பட்ட விமான நிலையமாக மாறியுள்ளது, கடன் மலைபோல் குவிந்துள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
விமான நிலையத்தை அதன் தற்போதைய நிலையில் பராமரிப்பதன் மூலம் அரசாங்கம் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (10) விமான நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இலங்கை தற்போது 2030 வரை செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை எதிர்கொள்கிறது என்று அமைச்சர் ரத்நாயக்க கூறினார்.
“மத்தள விமான நிலையத்தை விமானங்களை கொண்டு வரக்கூடிய அளவுக்கு கட்டமைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஓரிரு வருடங்களில் அதை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம். என்று அவர் கூறினார்.