கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசித ரோஷனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் பிறப்பித்த பிணை உத்தரவைத் தொடர்ந்து சந்தேக நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.