follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP2500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

Published on

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,”கடந்த காலங்களில் தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதாக குறிப்பிட்டு சர்வதேச நாடுகளில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக மாத்திரம் ரூ. 1965 இலட்சம் (19.65 கோடி) பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடம் மாத்திரம் 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த திட்டங்களுக்காக, முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி ஆகியோரே பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

மேலும், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் விதம், தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை தேயிலை நாமத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்காக அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சபாரி ஜீப்களில் டிக்கெட் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

பொலன்னறுவை வனவிலங்கு மண்டலத்தைச் சேர்ந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காவின் இரண்டு வாயில்களிலும் நெரிசலைக்...

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும்...

அருகம் விரிகுடாவில் கைதான பெண் ஒரு ஆணா? – தண்டனையும் வழங்கப்பட்டு விட்டதாம்..

அருகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்ததற்காக தாய்லாந்து சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலினத்திற்கான சட்ட...