இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று ( 21) அதிகாலை 5 மணி அளவில் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பகுதியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெரகொடவிலிருந்து கேகாலை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தும், கேகாலையிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் கூறினர்.
விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.