சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்திர மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, வரவிருக்கும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளின் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு (ECB) வழங்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் WTC இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்தின் திறமையை அங்கீகரித்து, இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்தது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுகள், டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தையும், இங்கிலாந்தின் மரபணுக்களையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.