follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

Published on

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை எட்டுபட்டுள்ளதால், அந்த வலுவான அடித்தளத்தில் பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும் புதிய பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமும் இலங்கையை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கு விளக்கிய ஜனாதிபதி, அந்த சவால்களுக்கு மத்தியிலும் 2026 வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவு கூர்ந்தார்.

நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சுங்கவரிச் சலுகைகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியைப் பேணுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கைக்கு தொடர்ந்து கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டுக்குக்
கிடைக்கும் பொருளாதார வளர்ச்சியின் அனைத்து பயன்களையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வலியுறுத்தினார்.

இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட உறுதிப்பாட்டைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இலங்கையை உலகளவில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தேவையான ஆதரவை வழங்கவும் உடன்பாடு தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி இவான் பாபர்ஜயோஜியோ(Evan Papageorgiou), சந்தேஷ் துங்கானா(Sandesh Dhungana) , உர்சுலா விரியாடினாடா(Ursula Wiriadinata), தினார் பிரிஹார்டினி( Dinar Prihardini), சம்சன் குவாலிங்கனா( Samson Kwalingana), ஓஸ்லெம் அய்டின்(Ozlem Aydin ) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிட பிரதிநிதிகளான மார்த்தா வோல்டெமிகேல்(Martha Woldemichael)மற்றும் மானவி அபேவிக்ரம ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு...