ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர், இளம்வயதுக்குழந்தைகள் மீது கைப்பேசி உபயோகத்தால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து பேசினார்.
அவர் மேலும் கூறுகையில்;
“ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு போன்ற பன்முகவளர்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கான வளர்ச்சி சூழலை அமைத்துத் தரவேண்டும்.”
சிறுவர்களின் மனநலத்தையும், உடல் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமென அமைச்சர் தெரிவித்தார்.