follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1எரிபொருள் விலையில் பெரிய சலுகை? ரூ.50 வரியை அரசாங்கம் நீக்க நடவடிக்கையாம்

எரிபொருள் விலையில் பெரிய சலுகை? ரூ.50 வரியை அரசாங்கம் நீக்க நடவடிக்கையாம்

Published on

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருள் ஒன்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 22) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கத்தின் காலத்தில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரூ.884 பில்லியன் பெறுமதியான கடனை அரசுத் திறைசேரிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

அந்தக் கடனைச் சீர்செய்யும் நோக்கில் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ரூ.50 வரி விதிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்தக் கடனின் அரைபங்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் தீர்வு காணப்பட்டதும், அந்த வரியை நீக்கும் வாய்ப்பை அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அளித்த வாக்குறுதி

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை...

ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன்...

‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் விவாதம்

எதிர்வரும் 24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை அன்றைய தினம்...