சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இன்று (23) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இலங்கை சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்கள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அழைக்கப்பட்ட போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மனுதாரர் சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டிகலால் சுற்றுலாத் தொழிற்துறை சரிந்து, நாடு அந்நிய செலாவணியை முற்றிலும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.