வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.