முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (24) இடம்பெறவுள்ளது என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விவாதம் இன்று மாலை 5.30 மணிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் கடந்த ஜூலை 22ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடத்தப்படவிருந்தது. எனினும், அந்தச் சட்டமூலத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதையடுத்து, அந்த விவாதத்தை பிறொரு தேதிக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரங்கள் குழு தெரிவித்துள்ளது.