மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 55-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலும், மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.