அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கடுவெல மாநகர சபை முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தை 3.6 மில்லியன் ரூபாவுக்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திர பதிவு செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக, இவ்வாறு வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.