ஏமனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2017ஆம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த ஏமன் நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு அவரை கொலைக் குற்றவாளியாக அறிவித்து மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் கூறுகையில், சனாவில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், முன்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மரண தண்டனையை தற்போது முற்றிலும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், ஏமன் அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.