இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த கோரமான விபத்தில் 18 கன்வார் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோகன்பூர் காவல் பிரிவின் எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே, ஏராளமான யாத்ரீகர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து, எதிரே வந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் தாக்கம் இவ்வளவு மோசமாக இருந்ததால், 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளதாகவும், தூக்க கலக்கத்தால் வாகனம் ஓட்டும் நேரத்தில் சிறிதளவாவது கவனச்சிதறல் ஏற்பட்டால் இதுபோன்ற பெரும் விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதற்கான துயரமான எடுத்துக்காட்டு இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாலைப் பயணத்தை தவிர்க்கும் பொறுப்புணர்வும் அவசியமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.