பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில், கனடாவுடன் வியாபார தொடர்புகளை விரிவுபடுத்துவது சவாலானதாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீனத்தின் அரசியல் அங்கீகாரத்திற்கு கனடா அரசின் ஆதரவு, அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையுடன் முரணாக இருப்பதாகத் தெரிவிக்கப்படும் இந்த நிலைப்பாடு, இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் தூதரகத் தொடர்புகளிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கலாம்.