follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுமர்மமாக உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி

மர்மமாக உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி

Published on

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி புன்னைச்சோலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டு ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்தி வருகிறார்.

அதற்கமைய , கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக  சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளாதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு சென்ற வேளையே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட...