follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஇந்திய படகு மோதி இலங்கை மீனவர்கள் உயிரிழப்பு – வடக்கில் போராட்டம்

இந்திய படகு மோதி இலங்கை மீனவர்கள் உயிரிழப்பு – வடக்கில் போராட்டம்

Published on

இந்திய மீனவப் படகு மோதி, இரண்டு இலங்கை மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நியாயத்தை பெற்றுத் தரக் கோரி, வடக்கு மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பருத்தித்துறை – மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பருத்தித்துறையிலிருந்து கடலுக்கு சென்ற மீனவப் படகொன்று, இந்திய இழுவைப் படகில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த படகில் பயணித்த இரண்டு மீனவர்களும் காணாமல் போன நிலையில், அந்த மீனவர்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கியுள்ளன.

இதையடுத்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் பிடிக்க முயற்சித்த தருணத்தில், மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...