74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகள் 197 பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் 20 கைதிகள்
கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகள்
வெலிகட சிறைச்சாலையில் 17 கைதிகள்
களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகள்
போகம்பர சிறைச்சாலையில் 11 கைதிகள்
மட்டகளப்பு சிறைச்சாலையில் 11 கைதிகள்
வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகள் இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.