270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது.
அதேநேரம், 130 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற, களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கியும் நேற்று செயலிழந்தது.
இதன் காரணமாக, நாட்டின் பல பாகங்களில் குறுகிய கால மின் துண்டிப்பு எதிர்பார்க்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின்பிறப்பாக்கி, நேற்றிரவு புனரமைக்கப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.