ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
டெய்லி சிலோன் செய்திப் பிரிவிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று எந்தவொரு பயங்கரவாதத்தையும் தாம் எதிர்ப்பதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்குமாயின், ஈஸ்டர் தாக்குதலை முஸ்லிம் பயங்கரவாதம் என்று எப்படி அடையாளப்படுத்த முடியும் என்று எமது செய்தியாளர் பதில் கேள்வியொன்றைத் தொடுத்தார்.
இதற்கு வழங்கிய பதில் உள்ளிட்ட முழுமையான செவ்வியை இங்கே பார்வையிடலாம்.