follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபுதிய கொவிட் பிரழ்வு இலங்கைக்குள்ளும் பரவும் அபாயம்

புதிய கொவிட் பிரழ்வு இலங்கைக்குள்ளும் பரவும் அபாயம்

Published on

புதிய ஒமிக்ரோன் பிரழ்வு இலங்கைக்குள்ளும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இதனை கருத்திற்கொண்டு பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டுமென சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

BA2 ஒமிக்ரோன் வைரஸின் துணை பிரழ்வாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த வைரஸ் தென்கொரியா, சீனா மற்றும் இந்தியா ஊடாக இலங்கைக்கு பரவுவதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுகிறது.

இதனை தடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் நோய் பரவலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அத்துடன் தடுப்பூசியை பெற்றிருப்பதும் கட்டாயமாகும். தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...