வந்தது 2,000 ரூபாய் நிவாரணம்

1205

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களின் பெயர்பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பெயர் பட்டியல் தற்போது தயாராகிவிட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நிதியமைச்சில் இருந்து பிரதேச செயலாளர்கள் அலுவலகத்திற்கு இந்த பணத்தொகையை அனுப்பி அதன் ஊடாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here