இலங்கை மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை மக்களுக்கு உதவ 80 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் தொன் அரிசி, 28 கோடி ரூபா மதிப்பில் மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் பால் பொருட்கள் வழங்க தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது எனவும் ஒன்றிய அரசின் அனுமதி யோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் குரிப்பித்து௭ல்லார்.